மாநில செய்திகள்

புழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை + "||" + 5 Sri Lankan fishermen released

புழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை

புழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை
புழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை

வேதாரண்யம் மேல்பட்டினம் அருகே கடந்த மாதம் நடுக்கடலில் எல்லையை தாண்டி படகில் வந்து மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக கடலோர காவல்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு புழல் சிறையில் உள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தனி வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.