மாநில செய்திகள்

போலீசாரின் தற்கொலையை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி + "||" + The question for the Tamil Nadu government

போலீசாரின் தற்கொலையை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

போலீசாரின் தற்கொலையை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்துகொள்வதாகவும், எனவே அவர்களின் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, 

பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்துகொள்வதாகவும், எனவே அவர்களின் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், பல்வேறு இயற்கை சூழல்களில் தொடர்ந்து பணியாற்றுவதாலும், விடுப்பு இல்லாமல் பணிபுரிவதாலும் போலீசார் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன ரீதியாகவும் ஓய்வு தேவை. எனவே, அவர்களின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொன் மாணிக்கவேலுக்கு அனைத்து வசதிகளும் வழங்காவிட்டால் நீதித்துறை அவசர நிலை பிரகடனம் செய்ய நேரிடும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு எச்சரிக்கை
சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பொன் மாணிக்கவேலுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்றால் நீதித்துறை அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டியது வரும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. ஏழைகள் முன்னேறி விட்டால் இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
நிலமற்ற ஏழைகள் பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டால், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. அனைத்து ‘ரேஷன்’ கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
முறைகேடுகளை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
5. கீழடி ஆய்வு தகவல்களை வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கீழடி ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்களை மாநில பாடத்திட்டத்தில் வரலாற்று பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.