மாநில செய்திகள்

பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + 5,145 tons of rice for mosques

பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி வழங்கப்படும் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க 9.11.2001 அன்று ஜெயலலிதா ஆணையிட்டு இருந்தார்.

அதன்படி, பள்ளிவாசல் களுக்கு தேவையான அரிசிக் கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமியர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு களைப் போலவே, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு நோன்பு தொடங்குவதற்கு முன்பே அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமியர்களிடம் இருந்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 5,145 மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.12 கோடியே 97 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். இதன்மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் பயன் அடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.