தேசிய செய்திகள்

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சகம் + "||" + Indians' abduction: Government in touch with Afghan authorities, says MEA

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சகம்
ஆப்கனில் கடத்தப்பட்ட இந்திய பொறியாளர்களை மீட்க முயற்சி நடைபெறுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Afganistan
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானின் பாக்லன் மாகாணத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் 7 பேரும் 

மினி பேருந்தில் துணை மின்நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலாஹுதீன் ரப்பானியை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் 

தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கடத்தப்பட்ட 7 இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு உதவி செய்யுமாறு ரப்பானியிடம் சுஷ்மா ஸ்வராஜ் கோரிக்கை 

விடுத்தார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுடன் 

தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் அரசின் உதவியுடன் அந்நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட நபர்களிடம் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது. சம்பவத்தின் சூழல் கருதி, யார் யாருடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் உள்ளது என்பதை பகிரங்கப் படுத்த முடியாது. ஏனெனில், இது 7 இந்தியர்களின்  உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாகும் என்று ரவீஷ் குமார் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியர்கள் கடத்தல் தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் 125 ஆசிரியர்களை தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.