உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: டொனால்டு டிரம்ப் + "||" + Did not pay N Koreans for release of prisoners: Trump

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: டொனால்டு டிரம்ப்

கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: டொனால்டு டிரம்ப்
கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். #DonaldTrump
வாஷிங்டன்,

வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்  ஆகிய இருவரும் வரும் ஜூன் 12 ஆம் தேதி, நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை வடகொரியா விடுவித்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

வடகொரிய நாட்டுத் தலைநகர் பியாங்கியாங்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டு இருந்தனர். வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியான ஆண்ட்ரூஸ் கூட்டு விமான படைதளத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அந்த 3 கைதிகளையும், அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேரில் சென்று வரவேற்றனர்.அப்போது பேசிய டிரம்ப், 3 கைதிகளையும் விடுவித்தமைக்காக கிம் ஜோங்-உன்னுக்கு நன்றி கூறினார்.

இந்த நிலையில், இண்டியானா மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர், தனது செயல் மூலம் தனது நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை செய்துள்ளார். வடகொரியாவால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் மிகவும் கண்ணியத்தோடு வந்துள்ளனர். இவர்களை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால், ஒபாமா அரசு  1.8 பில்லியன் டாலர் தொகையை ஈரானுக்கு கொடுத்து 5 அமெரிக்க கைதிகளை விடுவித்தது” என்று குற்றம் சாட்டினார். 



தொடர்புடைய செய்திகள்

1. வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன்: டொனால்டு டிரம்ப் தகவல்
வடகொரிய அதிபரை விரைவில் மீண்டும் சந்திப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. சுஷ்மா சுவராஜ் மூலம் நண்பர் மோடிக்கு அன்பான செய்தி அனுப்பிய டொனால்டு டிரம்ப்
சுஷ்மா சுவராஜ் மூலம் நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என டொனால்டு டிரம்ப் செய்தி அனுப்பி உள்ளார். #DonaldTrump #SushmaSwaraj #PMModi
3. வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.
4. ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளது: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்
ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
5. வடகொரியா சென்றார் தென்கொரிய அதிபர் : 3-வது முறையாக கிம்மை சந்திக்கிறார்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுவதற்காக தென்கொரியா அதிபர் பியாங்யாங் சென்றடைந்தார்.