தேசிய செய்திகள்

2 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi arrives at #Nepal's Janakpur Airport.

2 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றார் பிரதமர் மோடி

2 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றார் பிரதமர் மோடி
2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி நேபாளம் சென்றார். நேபாளத்தில் உள்ள ஜனக்பூருக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #PmModi
காத்மாண்டு,

இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று நேபாளம்  சென்றார். நேபாளத்தில் உள்ள பழமையான நகரமான ஜனக்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜனக்பூரில் உள்ள  20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜானகி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்கிறார். நண்பகலில் தலைநகர் காத்மாண்டு செல்லும் அவர், குடியரசு துணைத் தலைவர் நந்த பகதூர் பன், குடியரசுத் தலைவர் வித்யா தேவி பந்தாரி ஆகியோரை சந்திக்கிறார். மாலையில் நேபாளப் பிரதமர் கே.பி.ஒலியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இருவரும் சேர்ந்து அருண்-3 நீர் மின் நிலைய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். இரவில் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கிறார் கே.பி.ஒலி. அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க முக்திநாத் கோயிலுக்கு சனிக்கிழமை செல்லும் மோடி, தொடர்ந்து நேபாளத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

பிரதமர் மோடி நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்வது இது 3-ஆவது முறையாகும். நேபாளத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு இந்திய அரசில் உயர் பதவியில் இருப்பவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும் - பிரகாஷ் ஜவடேகர்
நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? என எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.
2. மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் - பிரதமர் மோடி தாக்கு
மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
3. ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் -பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
4. 2019-ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
5. வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது -பிரதமர் மோடி
வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.