மாநில செய்திகள்

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி + "||" + Professor Nirmala devi bail plea rejected

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு  தள்ளுபடி
தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #NirmalaDevi
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபின் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு கீதா, நிர்மலாதேவியை நேற்று (மே 9) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலாதேவியின் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டுவரப்பட்டு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கமான கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, நிர்மலாதேவியை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

இந்த நிலையில் நிர்மலாதேவியின் சார்பில்  ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முருகன் மற்றும்  கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2. ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு : பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு
நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் பெற்ற வழக்கில் கைதாகி உள்ள ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனு மீது இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குவதாக பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. “மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்
“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியுள்ளது.
4. எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி புகார்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலா தேவி உள்பட 3 பேருக்கு 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.