மாநில செய்திகள்

விருதுநகர்: கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட திமுகவினர் கைது + "||" + Virudhunagar:Proceed with governar Go to show blackout Including 3 MLAs Arrested by the DMK

விருதுநகர்: கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட திமுகவினர் கைது

விருதுநகர்: கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட திமுகவினர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற 3 எம்எல்ஏக்கள் உள்பட எதிர்க்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். #DMK #BanwarilalPurohit
சென்னை

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர்  மாவட்டத்திற்கு சென்று உள்ள  கவர்னர்  பன்வாரிலால் புரோஹித் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்  சாமி தரிசனம் செய்தார். மேலும்  கவர்னர்  விருதுநகர்  ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுபெற செல்ல உள்ளார்.

இதையடுத்து கவர்னர்  பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கவர்னர் இன்னும் அங்கு வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கரூருக்கு இன்று கவர்னர் வருகை பொதுமக்களிடமிருந்து மனுபெறுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
கரூருக்கு இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுபெறுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
2. அமைச்சர் கடம்பூர் ராஜூ மகன் திருமண வரவேற்பு கவர்னர், முதல்-அமைச்சர் நேரில் வாழ்த்து
அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
3. கரூருக்கு 7-ந் தேதி தமிழக கவர்னர் வருகை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்
கரூருக்கு வருகிற 7-ந் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
4. உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது கவர்னர் பெருமிதம்
உடல் உறுப்பு தானம் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையாக உள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
5. கவர்னர் கார் மீது மோதிய வழக்கில் அரசு பஸ் டிரைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்ற கார் மீது மோதிய வழக்கில், அரசு பஸ் டிரைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.