தேசிய செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் + "||" + Supreme Court Rejects Request For Probe Into Sridevi's Death

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. #Sridevi #SupremeCourt
புதுடெல்லி,

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கினார். அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீதேவி, துபாயில் மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
டெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீது இன்று விசாரணை
டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
3. டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்
டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. #EarthQuake
4. மாலத்தீவுக்கு அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியில் குறைப்பா? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. #Maldives
5. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது: ப சிதம்பரம்
காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை