தேசிய செய்திகள்

கர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு + "||" + Disqualify Sriramulu from contesting polls, Cong petitions EC

கர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு

கர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு
கர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது. #ElectionCommission
புதுடெல்லி,

 கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் -பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி இந்த தேர்தலில்  உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற பாரதீய ஜனதாவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. 

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், பாரதீய ஜனதா  கட்சியை சேர்ந்த  பி ஸ்ரீராமுலு மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும், அப்போதய தலைமை நீதிபதியின் உறவினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக  பேரம் பேசிய காட்சிகள் அடங்கியிருந்தது.

 சுரங்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக இருவரும் நீதிபதி உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக புகார் எழுந்தது. நேற்று, கர்நாடக உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோ ஒளிபரப்பட்டது. ஆனால், தேர்தல் கமிஷன் தலையிட்டு வீடியோவை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. 

இந்த நிலையில், தலைமை நீதிபதி உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், இந்த கோரிக்கைகள்  அடங்கிய மனுவை அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ பி ஸ்ரீராமுலு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு
தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் குழுக்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்கள் அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5. வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு
வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.