தேசிய செய்திகள்

ஜனக்பூர்-அயோத்தி இடையே பேருந்து சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார் + "||" + PM Narendra Modi & Nepalese PM KP Sharma Oli flag off the Indo-Nepal bus service from #Nepal's Janakpur to Uttar Pradesh's Ayodhya.

ஜனக்பூர்-அயோத்தி இடையே பேருந்து சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஜனக்பூர்-அயோத்தி இடையே பேருந்து சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
நேபாளத்தில் உள்ள ஜனக்பூருக்கும் அயோத்திக்கும் இடையே பேருந்து சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். #Modi #ModiNepalVisit
காத்மாண்டு,

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார். 

ஜனக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி.  அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.