தேசிய செய்திகள்

உன்னோவ் சம்பவம் : சிறுமியை எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகி உள்ளது + "||" + Unnao rape case: CBI confirms charges against BJP MLA Kuldeep Singh Sengar

உன்னோவ் சம்பவம் : சிறுமியை எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகி உள்ளது

உன்னோவ் சம்பவம் : சிறுமியை  எம்.எல்.ஏ பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகி உள்ளது
உத்தரப் பிரதேசத்தில் உன்னோவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளானார். இது தொடர்பாக . பங்கார்மாவ் தொகுதி  ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான பெண்ணின் தந்தை தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இதிலும் எம்.எல்.ஏ.யின் ஆதரவாளர்கள் மீது புகார் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் நேற்று முன்தினம் லக்னோவில் போலீசில் சரண் அடைய சென்றார். ஆனால் அவர் சரண் அடைய அனுமதிக்கப்படவில்லை. இந்த சர்ச்சைக்கு உரிய வழக்கில் திடீர் திருப்பமாக, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி விட மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது.

இந்நிலையில் லக்னோவில் குல்தீப்சிங் செங்கரை தடுப்புகாவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில்  விசாரணையில் குல்தீப்சிங் செங்கர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது

பாலியல் பலாத்காரம் செய்யும் அறைக்குக் காவலாக, அவரது பெண் உதவியாளர் ஷஷி சிங் உதவியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ செங்கர் உட்பட சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உன்னாவ் சிறுமி தொடர்ந்து கூறி வந்தாலும், பாஜக எம்எல்ஏவுக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறையினர், ஜூன் 20ம் தேதி எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகளை தவிர்த்துவிட்டு பிறரின் பெயர்களை மட்டும் சேர்த்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்டதாகக் கூறிய பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பாமல், அவரது ஆடைகளையும் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனர். இது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதை அப்பட்டமாகக் காட்டுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை ; கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
2. சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்,” குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. இந்தியாவில் பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆபத்து? பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் கும்பல்
பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் அந்தரங்க தகவல்களை திருடி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.
4. மீடூ விவகாரத்தில் நீண்டு கொண்டே போகும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல்
மீடூ விவகாரத்தில் நீண்டு கொண்டே போகும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் பாதிப்படைந்த பெண்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
5. குஜராத்தில் வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல் 342 பேர் கைது
குஜராத்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக, வெளிமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 342 பேர் கைது செய்யப்பட்டனர்.