தேசிய செய்திகள்

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு + "||" + Fire in godhavari river boat

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில்  சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு
ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த படகில் பயணம் செய்த 120 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விஜயவாடா, 

ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  படகில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் சிக்கிய 120 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் இருந்தவர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும், அருகில் உள்ள  தனியார்  மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.