தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை + "||" + Former Mumbai top cop Himanshu Roy commits suicide

மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருந்த மகாராஷ்டிர மாநிலம் முன்னாள் கூடுதல் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
மும்பை : 

மகாராஷ்டிர மாநிலம் முன்னாள் கூடுதல் டிஜிபி ஹிமான்சு ராய் மும்பையில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலை செய்து கொண்ட முன்னாள் கூடுதல் டிஜிபி ஹிமான்சு ராய் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருந்தவர். மேலும் இமான்சு ராய்  2013 ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற சூதாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர் ஆவர்.

1988 மகாராஷ்டிரா கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கார் டிரைவர் அரிபின் துப்பாக்கி சூடு,பத்திரிகையாளர் ஜே டே கொலை, விஜய் பாலாண்டே, லைலா கான் இரட்டை கொலை வழக்கு உள்பட  பல முக்கிய வழக்குகளை  கையாண்டவர் ஆவார். 

இமான்சு  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  ஆனால் அவரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்
மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
2. கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்
கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த போது மாரடைப்பில் மைதானத்தில் சுருண்டு விழுந்து மும்பை கிரிக்கெட் வீரர் பலியானார்.
3. சிகரெட் பிரச்சினையில் ஆடைகளை கலைந்து போலீசாரை மிரட்டிய மாடல் அழகி
சிகரெட் பிரச்சினையில் ஆடைகளை கலைந்து உள்ளாடைகளுடன் போலீசாரை மாடல் அழகி ஒருவர் மிரட்டி உள்ளார்.
4. ஆபத்தை உணராமல் கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த முதல்வரின் மனைவி
மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் மனைவி, பாதுகாப்பு எல்லையை மீறி கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. போதை தலைக்கேறிய நிலையில் போலீசுடன் தகராறில் ஈடுபட்ட இளம்பெண்கள்
மும்பையில் இளம்பெண்கள் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் போலீஸாரையே தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.