தேசிய செய்திகள்

நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு + "||" + Nalini Chidambaram and Karthi Chidambaram Income Taxes Case

நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு

நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #NaliniChidambaram #KarthiChidambaram
புதுடெல்லி

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர தடை விதிக்கக்கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது வருமான வரித்துறை.வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை மறைத்து வைத்ததாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய டிச.18-ஆம் தேதி வரை தடை
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.
2. மத்திய அரசு தாராளமாக தமிழகத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் - ப.சிதம்பரம் அறிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, மத்திய அரசு தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரம் தெரிவித்தார்.
3. கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி - ப.சிதம்பரம் பேட்டி
கஜா புயலின் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
4. தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
5. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் : சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.