மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம் + "||" + Minister Seloor Raju You should immediately apologize   Karaikudi nakarathar sangam

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம்

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்- காரைக்குடி நகரத்தார் சங்கம்
காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் அமைச்சரின் பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனகாரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை

கடந்த 9-ம் தேதி ’காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், தென் இந்திய நதிகளை இணைப்பது தனது வாழ்நாள் கனவு என்று பேசினார்.

ரஜினியின் இந்த கருத்து தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், நதிகளை இணைப்பை பயன்படுத்தி கரைக்குடி ஆச்சியை தான் பிடிக்க முடியும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார்.

அமைச்சரின் இந்த கருத்து,  சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் அமைச்சரின் இந்த பேச்சுக்கு காரைக்குடி நகரத்தார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பில் கூறி இருப்பதாவது;-

ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும். 

ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது -அமைச்சர் செல்லூர் ராஜூ
ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
2. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தமிழகத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
3. காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
காளவாசல் உயர்மட்ட பாலத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.