தேசிய செய்திகள்

10- வகுப்பு தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாபி மாணவர்கள் தாய் மொழியில் தோல்வி + "||" + Thousands of Punjabi students fail Class 10 Punjabi language test, professor blames authorities

10- வகுப்பு தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாபி மாணவர்கள் தாய் மொழியில் தோல்வி

10- வகுப்பு தேர்வில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாபி மாணவர்கள் தாய் மொழியில் தோல்வி
பஞ்சாப் மாநிலத்தில் 10- வகுப்பு தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாபி மாணவர்கள் தாய் மொழியில் தோல்வி அடைந்துள்ளனர். Punjab University

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் 10- வகுப்பு தேர்வு கடத்த மாதம் 12-ம் தேதி 31-ம் தேதி வரை நடைபெற்றது.  இந்தநிலையில் பஞ்சாப் பள்ளி கல்வி வாரியம் 10- வகுப்பு  தேர்வு முடிவுகளை வெளியிட்டது.  இதில் தாய் மொழியில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்  தாய் மொழியான பஞ்சாபி மொழியில் தோல்வி அடைந்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகையில்,

மாநில அரசு பஞ்சாபி மொழிக்காக நிதி ஒதுக்கப்பட்டது குறைவு.  சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் தாய் மொழியில் முன்னுரிமை கொடுக்கின்றது.  ஆனால் நம் மாநிலத்தில் தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. 

சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்  தங்கள் தாய்மொழியை ஆன்மீக ரீதியில் பின்பற்றுகின்றன.  பஞ்சாபில் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை, பஞ்சாபிக்கு குறைந்த நிதியதவி கிடைத்து வருகிறது.

இவ்வாறு அவர்  கூறினார்.