தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு + "||" + 1 CRPF personnel injured in Pulwama lost his life

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். #CRPFPersonnel

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் (சி.ஆர்.பி.எப்.) தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளில் சிலர் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.  எனினும் இந்த சம்பவத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் காயமுற்றார்.  தொடர்ந்து சண்டை நடந்து வந்த நிலையில் காயமடைந்த வீரர் உயிரிழந்து உள்ளார்.

இந்த பகுதியில் பலத்த கல்வீச்சு தாக்குதல் நடந்தது.  இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.  இதனால் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.