தேசிய செய்திகள்

நேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi offers prayers at #Nepal's Muktinath Temple

நேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி

நேபாளத்தின் முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் காட்மண்டு நகர் அருகிலுள்ள முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். #PMModi
காட்மண்டு,

பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை சென்றார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் மேற்கொண்ட இந்த பயணத்தில் ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின்னர், சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவிலுக்கு மோடி நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.

சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.

நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கூறப்படும் ஜானக்பூர் நகரின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், காட்டுமாண்டு அருகில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார்.  அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.  கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார்.

அதன்பின்பு அவர் முக்திநாத் கோவிலில் சாமி கும்பிட்டார்.  அவர் இறைவன் முன் அமர்ந்த நிலையில் பூக்களை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் வெளியே வந்த அவர் அந்நாட்டின் பாரம்பரியமிக்க டிரமை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று அவர் வழிபடுகிறார்.  பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் பிரதமர் மோடி தலைமையில் ரூ.1,550 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
ஒடிசாவில் ரூ.1,550 கோடியிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
2. பிரதமர் மோடி இன்று கேரளா வருகை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்.
3. பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வருகிறார் - பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி 15-ந் தேதி கேரளா வர உள்ளார். அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
4. சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு புதிய நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
சீக்கிய குரு கோபிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக புதிய நாணயத்தை பிரதமர் மோடி நாளை (13-ம் தேதி) வெளியிடுகிறார்.
5. ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி
ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலை செய்வது என்ன வகையான மன நிலை என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.