தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு + "||" + Ktaka polls 10.6 voting recorded till 9 am

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலை  9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. #KarnatakaElections2018
பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது  வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார்.  இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார். மதசார்பற்ர ஜனதா தள தலைவர் தனது குடும்பத்துடன் ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார், கர்நாடக தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி வரை 10.6% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.