மாநில செய்திகள்

குட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் + "||" + GutkhaScam Appeal Minister-DGP should be dismissed MKStalin

குட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்

குட்கா வழக்கில் மேல்முறையீடு: அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின்
குட்கா வழக்கில் மேல்முறையீடு செய்த அமைச்சர், டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #GutkhaScam
சென்னை: 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதுடன், மிகமூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ விசாரணையை காலம் தாழ்த்தவும் தடுக்கவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும்,டி.ஜி.பி.யும் தங்களது “முகமூடியாக” பினாமி முறையில் பயன்படுத்தி, இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறி உள்ளார்



தொடர்புடைய செய்திகள்

1. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ‘உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாதம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கினார்’ ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல் தகவல்
குட்கா வழக்கில் சிறையில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன் மாதம் ரூ.2½ லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கூறினார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
2. குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் மனு சி.பி.ஐ.க்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சி.பி.ஐ.க்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
3. குட்கா வழக்கு தொடர்பாக சென்னையில் 2 மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை
குட்கா வழக்கு தொடர்பாக சென்னையில் 2 மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு உள்ளது.
4. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
5. மத்தியில் மோடி ஆட்சியையும் மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் -மு.க.ஸ்டாலின்
மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் பேடி ஆட்சியையும் அகற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். #MKStalin #DMK