மாநில செய்திகள்

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது: பள்ளி கல்வி துறை + "||" + Advertisements should not be published for students who have higher scores in the public schools: School Education Department

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது: பள்ளி கல்வி துறை

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது:  பள்ளி கல்வி துறை
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வி துறை தெரிவித்து உள்ளது. #SchoolEducation
சென்னை,

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும்  அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” இவை போன்ற அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.