உலக செய்திகள்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்: பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல் + "||" + Nawaz Sharif Admits Pak Terrorists Carried Out 26/11 Mumbai Attacks

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்: பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்: பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல்
மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் என்று நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். #NawazSharif
புதுடெல்லி,

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள் தங்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில் 18 போலீசார் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 300–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை  உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா கூறியது. இருந்த போதிலும் எங்கள் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் விசாரணையிலும் மெத்தனம் காட்டியது. 

இந்த நிலையில், மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் என்று நவாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள நவாஸ் ஷெரீப், நேரடியாக ஒப்புக்கொள்ளாமல் மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார். நவாஸ் ஷெரீப் கூறும் போது, “  

''பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. (தீவிரவாதக் குழுக்கள் பெயரை குறிப்பிடவில்லை) அரசில் எந்தவிதத்திலும் பங்கு பெறாமல், ஆனால், அரசில் மிகுந்த அதிகாரம் மிக்க குழுக்களாக தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா? இதுதான் பாகிஸ்தான் கொள்கையா?

இப்படிப்பட்ட நிகழ்வுக்குப்பின், நாம் வழக்கை இன்னும் முடிக்காமல் முடிக்காமல் வைத்திருப்பது ஏன். இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் கேட்கிறார்கள். இதற்கு பதில்கூற முடியாமல் பாகிஸ்தான்  தவிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா அமெரிக்காவில் சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2. மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் - முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
3. மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த இந்தியா வாய்ப்பை பார்த்துக்கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி
2018 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த இந்தியா வாய்ப்பை பார்த்துக்கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. மும்பை தாக்குதல்: காலில் துப்பாக்கி சூடு அடைந்து கசாப்புக்கு எதிராக சாட்சியமளித்த 9 வயது சிறுமி!
“பயங்கரவாதத்திற்கு எதிராக துணிச்சலாக நிற்பேன், சரியான செயலை செய்வதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன்,” என்கிறார் தேவிகா ரோதாவான்.
5. மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அமெரிக்கா அறிவிப்பு
மும்பை தாக்குதல் 10 ஆண்டு நினைவு நாளில் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு என அமெரிக்கா அறிவித்து உள்ளது.