தேசிய செய்திகள்

கர்நாடக சட்ட சபை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் + "||" + Total turnout figure received so far is 70%: Election Commission

கர்நாடக சட்ட சபை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்ட சபை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்
கர்நாடக சட்ட சபை தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #ElectionCommission #KarnatakaElections2018

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தொடங்கியது.தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்தார். 

இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார். இதேபோன்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தனது மனைவி மற்றும் மகனுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தார். இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். 

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.