தேசிய செய்திகள்

நேபாள சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi arrived in #Delhi after completing his 2-day visit to #Nepal, received by EAM Sushma Swaraj.

நேபாள சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

நேபாள சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்ற பிரதமர் மோடி, பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பினார். #PmModi #SushmaSwaraj
புதுடெல்லி,

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று காலை அண்டை நாடான நேபாளத்துக்கு சென்றார். மோடி அங்கு செல்வது இது 3-வது முறையாகும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை அடிப்படையில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

காலை 10.15 மணிக்கு தனி விமானம் மூலம் நேபாளத்தில் உள்ள ஜானக்பூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை நேபாள ராணுவ மந்திரி ஈஸ்வர் போக்ரெல், 2-வது மாகாண முதல்-மந்திரி லால்பாபு ராவுத் ஆகியோர் வரவேற்றனர்.சீதையின் பிறப்பிடமாக கூறப்படும் ஜானக்பூரில் சீதாதேவிக்கு 1910-ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜானகி கோவில் உள்ளது. ஜானக்பூர் சென்றதும் மோடி அந்த கோவிலுக்கு நேரடியாக சென்றார். அவரை கோவில் வளாகத்தில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வரவேற்றார்.

கோவிலில் வளாகத்தில்கூடிய ஆயிரக்கணக்கானோர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் வருகையையொட்டி கோவில் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.பின்னர் அவர் கோவிலில் நடந்த, ‘சோடசோப்பச்சரா‘ என்னும் விசேஷ பூஜையிலும் கலந்து கொண்டார். சீதை மற்றும் ராமர் பற்றி 10 நிமிடங்கள் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்போது சீதாதேவியை மோடி மனமுருக வழிபட்டார். கோவிலை அவர் 40 நிமிட நேரம் சுற்றியும் பார்த்தார்.ஜானக்பூர் சீதை கோவிலுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

ஜானக்பூர் கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு வந்த மோடிக்கு அங்குள்ள பார்ஹபிகா நகரில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்தியாவின் அயோத்தியையும், நேபாளத்தின் ஜானக்பூரையும் இணைக்கும் விதமாக ‘ராமாயண சர்க்கியூட்‘ திட்டத்தின் கீழ் பஸ் சேவையை மோடியும், சர்மா ஒலியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) நேபாள நாட்டில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காத்மாண்டு அருகில் உள்ள முக்திநாத், பசுபதிநாத் கோவில்களுக்கும் சென்று வழிபட்டார். பின்னர், தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் நிலைமை, மோடி இல்லை என்றால் அராஜகம்தான் இருக்கும் - பிரகாஷ் ஜவடேகர்
நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு மாற்று யார் என்று சொல்லுங்கள்? என எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.
2. மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் - பிரதமர் மோடி தாக்கு
மகா கூட்டணி பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டணியாகும் என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
3. ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் -பிரதமர் மோடி
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
4. 2019-ம் ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சி: 27-ம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
2019-ம் ஆண்டின் முதல் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
5. வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது -பிரதமர் மோடி
வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.