தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெற்றோர்கள் ஓட்டு போட்டால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண் + "||" + Kids in Bengaluru Schools Could Get Extra Marks if Parents Vote

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெற்றோர்கள் ஓட்டு போட்டால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்

கர்நாடக சட்டசபை தேர்தல்: பெற்றோர்கள் ஓட்டு போட்டால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்
தேர்தலில் ஓட்டுப்போடும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று அம்மாநில ஆங்கில வழி கல்வி மேலாண்மை கழகம் அறிவித்தது. #KarnatakaElections
பெங்களூர்,

கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.  தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 

மாலை 6 மணி வரை சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதிவாகியுள்ள  வாக்குகள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்தநிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, ஓட்டுப்போடும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என்று மாநில ஆங்கில வழி கல்வி மேலாண்மை கழகம் அறிவித்தது. 

வாக்களித்த பெற்றோர் தங்களது கைவிரலில் வைக்கப்பட்ட அடையாள மையை பள்ளியில் காண்பிக்கவேண்டும் என்றும், அப்படி தாய், தந்தை ஆகிய இருவரும் காட்டினால் தலா 2 மதிப்பெண் வீதம் 4 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது. 

அதன்படி, பெங்களூரு நகரில் ஓட்டுப் போட்ட பெற்றோர் ஆங்கில வழி பள்ளி மேலாண்மை கழக ஆசிரியர்களிடம் கைவிரல் மையை காட்டி தாங்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தி பதிவு செய்தனர்.