மாநில செய்திகள்

செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் + "||" + The nurse will be taken to set up a university

செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்
செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #VijayaBaskar
சென்னை, 

உலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் சார்பில் நேற்று தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம் முடிவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கருத்தரங்கில் தேசிய அளவிலான மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவம் தொடர்பான பல்வேறு முக்கியமான வி‌ஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் செவிலியர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பி.எஸ்.சி., டிப்ளமோ செவிலியர் படிப்புகளை முடித்துவிட்டு 20 ஆயிரம் செவிலியர்கள் வெளிவருகின்றனர். இந்த நிலையில், செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.