மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு + "||" + he Metro Rail Company official must appear before the trial Court order

மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உரிய பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறோம். ஆனால், முறையாக பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை எனக்கூறி விசாரணைக்கு ஆஜராகும்படி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எங்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது சரியல்ல. அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘வருங்கால வைப்பு நிதிக்கான பங்கீட்டுத்தொகையை முறையாக செலுத்தி இருந்தால் சட்டரீதியாக விசாரணையை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து விசாரணைக்கே ஆஜராக முடியாது என்பது சரியல்ல. எனவே, நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்’ என்று உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. கணவரின் உடலை இறுதி சடங்கு செய்வதில் இரு மனைவிகளுக்கு இடையே பிரச்சினை: ஐகோர்ட்டு உத்தரவு
கணவரின் உடலை இறுதி சடங்கு செய்வதில் இரு மனைவிகளுக்கு இடையே பிரச்சினை இருந்து வருவது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2 நாட்களுக்கு சமரசம் ஏற்படாவிட்டால் போலீசாரே அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
2. பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் தீர்ப்பாயங்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
புதிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பழைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் வழக்குகளை விசாரிக்கலாம் என்று வாடகை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் மதுரை கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஜெய்ஹிந்த்புரத்தில் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்ற கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. தொடக்கக்கல்வி இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
முறையான கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூடம் இயக்குவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை, ஐகோர்ட்டு உத்தரவு
பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.