உலக செய்திகள்

பாரீசில் கத்தியால் குத்தியவன் உள்பட 2 பேர் பலி; 4 பேர் காயம் + "||" + Two dead in Paris attack, including knifeman: security sources

பாரீசில் கத்தியால் குத்தியவன் உள்பட 2 பேர் பலி; 4 பேர் காயம்

பாரீசில் கத்தியால் குத்தியவன் உள்பட 2 பேர் பலி; 4 பேர் காயம்
பிரான்ஸ் நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்தியவன் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்து உள்ளனர். #ParisAttack

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் மத்திய பாரீஸ் நகரில் ஓபரா ஹவுஸ் அருகே பார்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை நிறைந்த பகுதி உள்ளது.  வார விடுமுறை தினத்தினை ஒட்டி நள்ளிரவில் இங்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில், கத்தியுடன் வந்த நபரொருவர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.  இதில், ஒருவர் கொல்லப்பட்டார்.  4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு கொன்றனர்.  அந்த நபர் எதற்காக இதனை செய்துள்ளார் என தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த 3 வருடங்களில் நடந்த தொடர் தாக்குதல்களில் 245 பேர் மரணம் அடைந்து உள்ளனர் என ஜிகாதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரியை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 2 கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்: கலபுரகி அருகே பரபரப்பு
கலபுரகி அருகே வியாபாரியை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
2. நாகர்கோவில்: போலீசார் அதிரடி நடவடிக்கை - ரூ.41 லட்சம் குட்கா, போதை பாக்குகள் பறிமுதல்
நாகர்கோவிலில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. டெல்லிக்குள் செல்ல நள்ளிரவில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கிய போலீசார்
டெல்லிக்குள் செல்ல நள்ளிரவில் விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
4. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சமயோசிதமுடன் செயல்பட்டு கைது செய்ய உதவிய பெண்ணுக்கு போலீசார் பாராட்டு
டெல்லியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சமயோசிதமுடன் செயல்பட்டு கைது செய்ய உதவிய பெண்ணை போலீசார் பாராட்டி உள்ளனர்.
5. அ.தி.மு.க. நிர்வாகி கொலை: 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
அ.தி.மு.க. நிர்வாகி கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.