உலக செய்திகள்

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற வட கொரியா முடிவு; டிரம்ப் நன்றி + "||" + North Korea decides to eliminate nuclear testing center Thank you drum

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற வட கொரியா முடிவு; டிரம்ப் நன்றி

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற வட கொரியா முடிவு; டிரம்ப் நன்றி
அணு ஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். #DonaldTrump
வாஷிங்டன்,

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாட்டு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும் 23ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் அகற்றி விட அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், பாதுகாப்பு சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், அணு குண்டு சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில், 'எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணு குண்டு சோதனை மையத்தை அகற்ற போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நச்சலூரில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அப்போது கடையின் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
வட கொரியாவின் பியாங்யாங் நகரில் இரு கொரியாக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.
3. திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
4. தனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
கரூரில் தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை அகற்றி கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.
5. வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு; உரிமையாளர்கள் சாலைமறியல்
தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.