உலக செய்திகள்

இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு + "||" + Six killed, dozens hurt in Indonesia church attacks: police

இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் தேவாலயங்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது. #BombAttack

உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேஷியா.  இந்நாட்டில் மற்ற மதத்தினரும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர்.  சமீப வருடங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் மீது சகிப்பின்மை காரணங்களால் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இங்குள்ள இரண்டாவது மிக பெரிய நகரம் சுரபயா.  இந்நகரில் கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இந்நகரில் 3 தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவேளையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.  இதில் முதல் தாக்குதல் காலை 7.30 மணியளவில் நடந்தது.

அவற்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒன்றும் அடங்கும்.  இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது.  35 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.  இதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
2. சுதந்திர தினவிழாவின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது - காஷ்மீர் போலீஸ் அதிரடி
டெல்லி மற்றும் ஜம்மு நகரங்களில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் விதமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.