உலக செய்திகள்

பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு தடை + "||" + Pakistan blocks US diplomat from leaving after fatal crash

பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு தடை

பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு தடை
அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. #Pakistan
இஸ்லாமாபாத்,

கார் விபத்தில் இளைஞர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புணிபுரிபவர் ராணுவ இணைப்பு அதிகாரி காலினல் ஜோசப் இமானுவேல் ஹால். இவர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி இஸ்லாமாபாத்தின் வடக்கு பகுதியில், சிக்னல் விதிகளை மதிக்காமல் கார் ஒட்டி சென்றார். இந்த விபத்தில் அடீக் பெய்க் என்ற இளைஞர் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற ஜோசப் குடிபோதையில் இருந்தார் என புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, அவரை கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளின் படி அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.