மாநில செய்திகள்

சேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் + "||" + CM Edappadi Palanisamy opened new flyover at Salem-Bangalore passage

சேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம்-பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தினை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். #EdappadiPalanisamy

சேலம்,

சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் புறவழிச்சாலையில் ரூ.82.27 கோடியில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.  இந்த மேம்பாலத்தினை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.

திருவாகவுண்டனூர் முதல் குரங்குசாவடி வரை 1,250 மீட்டர் நீளமும் மற்றும் 17.25 மீட்டர் அகலமும் உள்ள மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று தாரமங்கலம் பகுதியில் அமையவுள்ள புதிய சாலை உள்பட ரூ.70 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.