கிரிக்கெட்

கடைசி நேரத்தில் ஐதராபாத்தின் ‘ஜெட்’ வேகத்திற்கு தடை! சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு + "||" + Chennai Super Kings vs Sunrisers Hyderabad IPL 2018 CSK slow down SRH with quick wickets

கடைசி நேரத்தில் ஐதராபாத்தின் ‘ஜெட்’ வேகத்திற்கு தடை! சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு

கடைசி நேரத்தில் ஐதராபாத்தின் ‘ஜெட்’ வேகத்திற்கு தடை! சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு 180 ரன்களை ஐதராபாத் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. #CSKvSRH
 புனே,


முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடக்கும் 46–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ள டோனி தலைமையிலான சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார்கள். சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக 3.3வது ஓவரில் ஐதராபாத் அணியின் ஆட்டக்காரர் ஹேல்ஸ் 2 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்ஸன், தவானுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் ஐதராபாத் அணிக்கு ஒரு வலுவான தொடக்கம் மற்றும் கூட்டணியை அமைத்தார்கள். 

முக்கால்வாசி ஆட்டம் 15 வது ஓவர் முடியும் வரையில் இந்த கூட்டணியை சென்னை பந்துவீச்சால் அசைக்க முடியவில்லை. ஐதராபாத் அணியின் வேகத்தை 15.6 வது ஓவரில் பிராவோ தடுத்து நிறுத்தினார். ஜெட் வேகத்தில் சென்றுக்கொண்டு இருந்த ஐதராபாத் அணியின் ரன் கணக்கிற்கு ஒரு இடைமறிப்பு வைத்தார். அடுத்த ஓவரிலே வில்லியம்ஸன் விக்கெட்டும் விழ சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து விளையாடியவர்களில் ஹூடா ஐதராபாத் அணிக்கு கடைசி நேரத்தில் ரன் சேர்க்க முயற்சி செய்தார். 
ஐதராபாத் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 179 ரன்களை எடுத்தது. 

சென்னை அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 79 ரன்களையும், வில்லியம்ஸன் 51 ரன்களையும் எடுத்து இருந்தனர். விக்கெட் விபரம்  1-18 (அலெக்ஸ் ஹேல்ஸ், 3.3 ஓவர்கள்), 2-141 (ஷிகர் தவான், 15.6 ஓவர்கள்), 3-141 (வில்லியம்ஸன், 16.1 ஓவர்கள்), 4-160 (மணிஷ் பாண்டே 18.3 ஓவர்கள்). இறுதியாக ஹூடா 21 ரன்களுடனும், ஷாகிப் அலிஹாசன் 8 ரன் களுடனும் களத்தில் இருந்தனர்.