கிரிக்கெட்

அம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது! சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது + "||" + Ambati Rayudu guides CSK to win

அம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது! சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது

அம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது! சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் நிர்ணயம் செய்த 180 ரன்கள் வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் நொறுக்கியது. அம்பத்தி ராயுடு ஆக்ரோஷம் காட்டினார். #CSKvSRH #AmbatiRayudu

புனே, 


முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடந்த 46–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் இருந்த டோனி தலைமையிலான சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய ஐதராபாத் அணி,  நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 179 ரன்களை எடுத்தது. சென்னை அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய வேகத்திலே, ஆட்டத்தை இறுதிவரையில் விறுவிறுப்பாக கொண்டு சென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடு மற்றும் வாட்சன் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரிகள் என விருந்து அளித்தார்கள். ரன் ஓட்டமின்றி விறுவிறுப்பாக ரன் கணக்கை உயர்த்திய ஜோடி 13.3 வது ஓவரில் உடைந்தது. அதுவரையில் ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தது. வாட்சன் 57 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் அம்பத்தி ராயுடு தொடக்கத்தில் காட்டிய ஆக்ரோஷத்தையே காட்டினார். அவருடன் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் அவுட் ஆகி திரும்பிவிட்டார்.

அம்பத்தி ராயுடுவுடன் கேப்டன் டோனி களமிறங்கினார். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்கள். அபாரம் காட்டி சென்னை அணியை வெற்றியடைய செய்தார்கள். சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் ஐதராபாத் நிர்ணயம் செய்த இலக்கை நொறுக்கியது. அம்பத்தி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 62 பந்துக்களை எதிர்க்கொண்ட அவர் 7 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 100 ரன்கள் அடித்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் டோனி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார். 
 
3 ஆட்டங்கள் கையில் இருக்கும் நிலையில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் கால்பதித்துவிடலாம் என விளையாட்டை தொடங்கிய சென்னை அணி  ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது


தொடர்புடைய செய்திகள்

1. அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் - ஐ.சி.சி. புகார்
அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் உள்ளதாக ஐ.சி.சி. புகார் தெரிவித்துள்ளது.