தேசிய செய்திகள்

வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் கோரத்தாண்டவம்: 19 பேர் பலி + "||" + IMD issues fresh warning of thunderstorm, squall for north and east India on Monday

வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் கோரத்தாண்டவம்: 19 பேர் பலி

வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் கோரத்தாண்டவம்: 19 பேர் பலி
வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயலில் சிக்கி 19 பேர் பலியாகினர். #thunderstorm
புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் புழுதி புயலில் சிக்கி 9 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.  

மேற்குவங்க மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி 8 பேர்  பலியாயினர். 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியில் 2 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நொய்டாவில் 1 ஒருவர் பலியாகி உள்ளார்.   

பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். 

வட மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய புழுதி புயலில் சிக்கி 124 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 73 பேரும், ராஜஸ்தானில் 35 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளம், ஜார்கண்ட், அசாம் மற்றும் மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு நாளை வரை இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.