மாநில செய்திகள்

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது திருநாவுக்கரசர் பேட்டி + "||" + Congress, DMK The coalition continues

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது திருநாவுக்கரசர் பேட்டி

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது திருநாவுக்கரசர் பேட்டி
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Congress
ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகவில் நடந்துள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். 5 ஆண்டுகள் ஊழல் இல்லாத சிறந்த ஆட்சியை சித்தராமையா நடத்தி உள்ளார்.

பாரதீய ஜனதா கட்சிக்காக பிரதமர், மத்திய மந்திரிகள், பாரதீய ஜனதா முதல்வர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு பணம் மலைபோல் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்.

இந்தியாவில் எந்த கூட்டணியும் ஆயுட்காலம் ஒப்பந்தம் போட்டது இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரங்களில் சீட் மற்றும் வெற்றியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டியது ஆகும். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடர்கிறது.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின்போது தனித்தனியாக தான் போட்டியிட்டோம். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். தற்போதும் கூட்டணி இருக்கிறது. அது தொடருகிறது. தமிழகத்தில் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது இலக்கு.

10 ஆண்டுகள் கழித்தோ, 20 ஆண்டுகள் கழித்தோ வரலாம். அதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்று அர்த்தமில்லை. காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறினால் தி.மு.க.வை விட்டு வெளியேறுவதாக கருதவேண்டியது இல்லை.

3-வது அணி என்பதே கிடையாது. அதற்கு யார் தலைவர்? அதில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன? 3-வது அணியில் மம்தாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இருப்பார்களா?... அப்படி உருவாக வாய்ப்பு இல்லை. உருவானாலும் ஆட்சி அமைக்க முடியாது.

பாரதீய ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அகற்றப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் 14-ந் தேதி (இன்று) மத்திய அரசு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு என்ன தாக்கல் செய்கிறது என்பதை பார்ப்போம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்வது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்தியபிரதேசத்தில் தொடரும் ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ் - பா.ஜனதா சரிசமம்
மத்தியபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா சரிசமமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
2. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - முகுல் வாஸ்னிக் பேட்டி
5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று முகுல் வாஸ்னிக் கூறினார்.
3. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பினால் மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
4. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி பெருமிதம்
காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கப்பட்டுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பெருமிதம் அடைந்துள்ளார்.
5. பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை; காங்கிரஸ் வலியுறுத்தல்
வேலை இழந்து தவிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.