தேசிய செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு இடையே மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது + "||" + West Bengal panchayat elections: To ensure there is a contest today, Opposition makes it TMC vs rest

பலத்த பாதுகாப்புக்கு இடையே மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

பலத்த பாதுகாப்புக்கு இடையே மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது
பலத்த பாதுகாப்புக்கு இடையே மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. #WestBengal
கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புகளுடன் திங்கள்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாக அனைத்து கட்சிகளும் கருதுகின்றன

திங்கள்கிழமை (இன்று) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குகள் வரும் 17-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

பஞ்சாயத்து தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனே மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பிரச்னை எழுந்தது. எதிர்கட்சிகள் தேர்தல் குறித்து மாநில ஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்தன. பல்வேறு பிரச்னைகளை கடந்து இன்று  ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தலை முன்னிட்டு அசாம், ஒடிசா சிக்கிம் ஆந்திரா உள்ளிட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 46-ஆயிரம் மாநில போலீஸாரும், கொல்கத்தா நகர காவல் துறை போலீஸார் மட்டும் 12-ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் அந்த மாதம் 23-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையை கையாள்வதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும் அந்தக் குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம் வந்த அமித்ஷாவுக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு
மேற்கு வங்காளம் வந்த அமித்ஷாவுக்கு கருப்புகொடி காட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.