தேசிய செய்திகள்

20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் + "||" + petrol price raised after 20 days

20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்

20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல்  விலையில் மாற்றம்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாட்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #Petrol #Diesel #Price
சென்னை, 

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அறிவிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும். 

இந்த சூழலில், கடந்த  20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதாலே, எண்ணைய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், இந்த கூற்றை எண்ணைய் நிறுவனங்கள் மறுத்தன. 

இந்த நிலையில், 20 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல், 77 ரூபாய் 43 காசுகளாக இருந்த நிலையில், 18 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்டதன் மூலம், ஒரு லிட்டர் பெட்ரோல்  இன்று ரூ.77.61 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், டீசல் ஒரு 69 ரூபாய் 56 காசுகளாக இருந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்த்தப்பட்டு 69 ரூபாய் 79 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு
பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
2. வாட் வரியை குறைத்த பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
வாட் வரியை குறைத்த பிறகும் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
4. தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
5. தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை, வாகன ஓட்டிகள் கவலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.