மாநில செய்திகள்

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி -திவாகரன் ஆவேசம் + "||" + Sasikala is not my sister anymore She is a former sister Dhivakaran obsession

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி -திவாகரன் ஆவேசம்

சசிகலா இனி என் சகோதரி அல்ல அவர் முன்னாள் சகோதரி  -திவாகரன் ஆவேசம்
சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி என திவாகரன் கூறினார். #TTVDhinakaran #Dhivakaran #Sasikala

மன்னார்குடி

மன்னார்குடியில் வைத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்ர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு மன நலம் சரியில்லை என்று என் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளார். சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி.  சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்.

 சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் ,  சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்திற்கு டிடிவி தினகரன் தான் காரணம். என் மூலமாக சசிகலாவை பழிவாங்க தினகரன் எண்ணுகிறார்.

 மூன்று முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவன் நான் . என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி இனி எங்களை மாபியா குடும்பம் என அழைக்கமாட்டர்கள்

யாரும் பிறக்கும்போது பதவியுடன் பிறப்பதில்லை. எனக்கு மனநிலை சரியில்லை என்று சொல்வது கையாலாகதத்தனம்; மனநிலை சரியில்லாத எனக்கு ஏன் நோட்டீஸ் கொடுத்தார்கள் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி
இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார். பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார்.
2. கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
கருணாநிதியின் தொண்டர்களை தன்பக்கம் இழுக்க பார்க்கிறார் ரஜினிகாந்த் என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது.
4. அமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை அமைச்சர் ஜெயக்குமார் சமாளிப்பு
தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, எச்.ராஜா தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #AmitShah #Jayakumar
5. அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #TTVDhinakaran #AIADMK