தேசிய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு துவங்கியது + "||" + Re-polling underway at booth numbers 20 and 21 in Koppal district's Kushtagi constituency #KarnatakaElections2018

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு துவங்கியது

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு துவங்கியது
கர்நாடகாவின் ஹெப்பால், குஷ்டகி தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. #KarnatakaElections2018
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அவை சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தடங்கல் இன்றி நடைபெற்றது.

ஆனால் பெங்களூரு ஹெப்பால் தொகுதிக்கு உட்பட்ட லொட்டேகொல்லஹள்ளி காந்தி வித்யாலயா தொடக்கப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந் தது. அந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்காளர்கள் எந்த பொத்தானை அழுத்தினாலும் ஒரே வேட்பாளருக்கு ஓட்டு விழுந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ஓட்டுப்பதிவு பணியை நிறுத்தினர்.

அதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் ஓட்டுப்பதிவு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த லொட்டேகொல்லஹள்ளி வாக்குச்சாவடியில் 14-ந் தேதி (அதாவது இன்று) வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் லொட்டேகொல்லஹள்ளி வாக்குச்சாவடியில் சுமார் 1,444 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 740 பேரும், பெண் வாக்காளர்கள் 704 பேரும் அடங்குவர். அவர்கள் இன்று தங்களின் வாக்கை பதிவு செய்கிறார்கள். ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் மறுவாக்குப்பதிவு குறித்து அந்த பகுதியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதேபோல் திடீர் நடவடிக்கையாக கொப்பல் மாவட்டம் குஷ்டகி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் ஓட்டுகள் பதிவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக எச்.டி குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaElection
2. கர்நாடக சட்டமன்ற தேர்தல்: பாஜக முன்னிலை, தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சிதொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #KarnatakaElectionResults2018
3. சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவில் கடும் போட்டி, நிமிடத்துக்கு நிமிடம் மாறும் முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018
4. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018
5. கர்நாடக சட்டமன்ற தேர்தல்: வாக்கு எண்ணிக்கை துவங்கியது
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. #KarnatakaElections2018