தேசிய செய்திகள்

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: பலர் காயம், ஊடக வாகனங்கள் மீது தாக்குதல் + "||" + WestBengal: BJP supporter in Bilkanda severely injured after being attacked with a knife, allegedly by TMC workers.

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: பலர் காயம், ஊடக வாகனங்கள் மீது தாக்குதல்

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: பலர் காயம், ஊடக வாகனங்கள் மீது தாக்குதல்
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் காயம் அடைந்தனர்.
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில், ஒரே கட்டமாக இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெறும் இந்த பஞ்சாயத்து தேர்தலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை பாதுகாப்பையும் மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது.  பாங்கர் பகுதியில் தொலைக்காட்சி நிறுவன வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். கேமராவும் உடைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

பிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க செல்பவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். ஓட்டு போட சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பில்க்ண்டா பகுதியில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறைச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் காயம் அடைந்த பாரதீய ஜனதா பிரமுகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.