தேசிய செய்திகள்

காவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன + "||" + Cauvery River Water Distribution In the draft program In subdued What are the details

காவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன

காவிரி நதி  நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன
காவிரி நதி நீர் பங்கீடு வரைவு திட்டத்தில் அடங்கி உள்ள விவரங்கள் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #CauveryIssue #SupremeCourt
புதுடெல்லி

காவிரி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்  தொடங்கியது  சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார்.  காவிரி  வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட  கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது.  

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என   - மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறினார்.

காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும்; ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார்  உருவாக்கப்படும் நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக இருக்கும்  என  யு.பி.சிங் கூறினார்.

வரை வித்திட்டத்தில் என்ன குறிப்பிட பட்டு உள்ள முக்கிய விவரம் வருமாறு:- 

* உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.

* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார் 

* 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார் 

* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்

* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் 

* காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும்.  காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்  என  மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது