தேசிய செய்திகள்

வரைவு திட்டத்தில் கூறபட்டு உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன? + "||" + In the draft plan stated   What is the power of the Cauvery River Distribution Committee?

வரைவு திட்டத்தில் கூறபட்டு உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?

வரைவு திட்டத்தில் கூறபட்டு உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?
வரைவு திட்டத்தில் கூறபட்டு உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது
புதுடெல்லி

காவிரி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்  தொடங்கியது  சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார்.  காவிரி  வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட  கவரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது.  

வரைவு திட்டத்தில் என்ன குறிப்பிட பட்டு உள்ள விவரம் வருமாறு:- 

* உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.

* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார் 

* 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார் 

* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்

* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் 

* குழுவின் அடிப்படை பணிகளுக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும் 

* குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்
 
* குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்

* காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 

காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?

* நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்

* நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும்

* உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் குழுவுக்கு அளிக்கப்படும். நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும்

* தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது