தேசிய செய்திகள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது + "||" + Arun Jaitley undergoes successful kidney transplant at AIIMS

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. #ArunJaitley #AIIMS
டெல்லி

மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி, கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடா்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்தார், இதனால் இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னா் பல பரிசோனைக்கு பிறகு, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யப்போவதாக மருத்துவா்கள் முடிவு செய்திருந்தனா். இதன் தொடா்பாக அவருக்கு இன்று அறுவை சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்கையை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டினா். மேலும். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.