மாநில செய்திகள்

‘எனது துறை கேள்விகள் இருந்தால் கேளுங்கள்’ பத்திரிகையாளர்களிடம், அமைச்சர் செல்லூர் ராஜூ காமெடி + "||" + Journalists, Minister Seloor Raju's comedy

‘எனது துறை கேள்விகள் இருந்தால் கேளுங்கள்’ பத்திரிகையாளர்களிடம், அமைச்சர் செல்லூர் ராஜூ காமெடி

‘எனது துறை கேள்விகள் இருந்தால் கேளுங்கள்’ பத்திரிகையாளர்களிடம், அமைச்சர் செல்லூர் ராஜூ காமெடி
காரைக்குடி ஆச்சி பற்றிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. #SeloorRaju
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த வாரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அவரால்(ரஜினிகாந்த்) காரைக்குடி ‘ஆச்சியை’ தான் பிடிக்க முடியும். தமிழ்நாடு ஆட்சியை பிடிப்பது மக்கள் கையில் தான் உள்ளது’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

காரைக்குடி ஆச்சி பற்றிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நகரத்தார் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்தநிலையில் சென்னை அண்ணாநகர் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் காவிரி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘ஏற்கனவே நான் கேசுவலாக(காரைக்குடி ஆச்சி) சொன்னதை போய் என்னை மாட்டிவிட்டீர்கள். எனவே வாங்க தலைவரே(கையெடுத்து கும்பிடுகிறார்). எனது துறை சம்பந்தமான கேள்விகள் இருந்தால் மட்டும் கேளுங்கள்’ என்று சிரித்தபடி கூறிவிட்டு, காவிரி விவகாரம் பற்றி பதில் அளிக்காமல் சென்று விட்டார்.