மாநில செய்திகள்

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய படிவத்தில் ‘செல்பி’ புகைப்படம் ஒட்டக்கூடாது மத்திய அரசு அறிவுறுத்தல் + "||" + Central government notification should not be photographed

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய படிவத்தில் ‘செல்பி’ புகைப்படம் ஒட்டக்கூடாது மத்திய அரசு அறிவுறுத்தல்

ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய படிவத்தில் ‘செல்பி’ புகைப்படம் ஒட்டக்கூடாது மத்திய அரசு அறிவுறுத்தல்
மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள், ஓய்வூதியத்துக்காக அளிக்கும் விண்ணப்ப படிவம் தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்கள், ஓய்வூதியத்துக்காக அளிக்கும் விண்ணப்ப படிவம் தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெறுவதற்கு 8 மாதங்களுக்கு முன் தலைமை தபால் நிலையங்களில் இருந்து ‘படிவம்–5’ வாங்கி அதை நிரப்பி வழங்க வேண்டும்.

இந்த படிவத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்துக்காக கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளின் முழு அளவில், முறையே புகைப்படம் மற்றும் கையெழுத்து இருக்க வேண்டும். புகைப்படத்தை பொறுத்தவரை அது ‘செல்பி’யாகவோ, கம்ப்யூட்டரில் வரைந்ததாகவோ, கருப்பு–வெள்ளையாகவோ இருக்கக்கூடாது.

கருப்பு கண்ணாடி அல்லது முடியால் கண் மறையும் வகையில் புகைப்படம் இருக்கக்கூடாது. அதைப்போல புகைப்படத்தில் கண் பகுதியில் கையெழுத்து போடக்கூடாது. அடர் நிற பின்னணி கொண்ட தெளிவான புகைப்படமாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த படிவத்துடன் அரசு ஊழியர் தனது மனைவி அல்லது கணவனுடன் சேர்ந்து எடுத்த 3 புகைப்படங்களையும் (தனித்தனி புகைப்படங்களும் ஏற்கப்படும்) தலைமை தபால் நிலையத்தால் சான்றளிக்கப்பட்டு இணைக்க வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.