தேசிய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தபால் ஓட்டுக்கள் அடிப்படையில் பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை + "||" + Counting of votes begins; tight security at counting centres

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தபால் ஓட்டுக்கள் அடிப்படையில் பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தபால் ஓட்டுக்கள் அடிப்படையில் பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டுக்கள் அடிப்படையில் பல இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.  வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பல்வேறு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் அடிப்படையில் காங்கிரஸ் பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது.