தேசிய செய்திகள்

சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்; கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பின்னடைவு + "||" + JD(S) leader GT Devegowda leads in Chamundeshwari against Congress leader Siddaramaiah

சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்; கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பின்னடைவு

சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்; கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பின்னடைவு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி சித்தராமையா பின்னடைவை சந்தித்துள்ளார். #KarnatakaElections2018,
பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. 

முன்னிலை நிலவரம் தெரிய வந்த 222 தொகுதிகளில்  61  இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும் 112 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையும் வகிக்கின்றன. ஜேடிஎஸ் 48 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சி ஒரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

சித்தராமையா பின்னடைவு

கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சாமூண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா பின்தங்கியுள்ளார்.  அதேசமயம்,  முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட பதாமி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்