தேசிய செய்திகள்

ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை + "||" + BJP’s chief ministerial candidate B S Yeddyurappa offers prayers in a Bengaluru temple

ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை

ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை
ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.
ஷிகாரிபுரா,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.  அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்தது. சிறிது நேரத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. 

காலை 11 மணி நிலவரப்படி  முன்னணி நிலவரம் தெரியவந்த 222 தொகுதிகளில் 58  இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையும் 117 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையும் வகிக்கின்றன. ஜேடிஎஸ் 44  இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் இரு  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 


எடியூராப்பா முன்னிலை

ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல் மந்திரி வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.   அவர் தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.